‘Tamanna’: இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான கிரைம் திரில்லர் தொடர் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’. தற்போது அதன் தொடர்ச்சி ‘ஒடேலா 2’ தொடர் உருவாகிறது.
இந்த தொடரில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடருக்கான படப்பிடிப்பு வாராணாசியில் தொடங்கியது. இந்த நிலையில், வாராணாசிக்கு படப்பிடிப்புக்கு வந்த நடிகை தமன்னா அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்த புகைப்படங்களை நடிகை தமன்னா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஹர ஹர மகாதேவ்’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.