கிளாமராக நடனமாடுவது கீழ்த்தரம் கிடையாது.. நெகட்டிவிட்டியை பரப்பபாதீர்கள்! – தமன்னா வேண்டுகோள்..

0
133

Actress Tamannaah: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் ‘அரண்மனை 4’ படத்தில் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், இந்தப் படம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ‘முன்பைவிட இப்போது அதிகமாக கிளாமர் காட்டுவது ஏன்?’ என நடிகை தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமன்னா, “கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது கீழ்த்தரம் கிடையாது. இதன் மீதான எண்ணங்களை ரசிகர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். ‘காவாலா’ பாடலைப் பார்த்துவிட்டு சிலர் தரைக்குறைவாக கமெண்ட் செய்தார்கள்.

அதனைப் பார்த்ததும் உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. கிளாமர் பாடல்களில் நடனம் ஆடுவதும் ஒருவகையான கொண்டாட்டம் தான். அதை ரசிக்கப்பழக வேண்டுமே தவிர, நெகட்டிவிட்டியை பரப்பக்கூடாது.

ஆண் ரசிகர்கள் போலவே பெண் ரசிகர்களும் இந்த கிளாமர் குறித்தான பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார். தமன்னாவின் இந்த பதில் சமூக வலைத்தளங்களி பேசும்பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here