‘நானாக இருந்தால் ‘அனிமல்’ படத்தில் நடித்திருக்கவே மாட்டேன்’ – நடிகை டாப்ஸி!

0
107

Actress Tapsee: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ‘அனிமல்’. இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஹிந்தியில் தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது. இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாக கூறி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், ‘அனிமல்’ படம் குறித்து நடிகை டாப்சி அளித்த பேட்டியில், “நான் ‘அனிமல்’ போன்ற கதைகளில் நடித்திருக்க மாட்டேன். சினிமா துறையில் நடிகர் – நடிகைகளுக்கு என ஒரு பவர் இருக்கும். சில பொறுப்புகளும் இருக்கும். இதற்காக மற்ற நடிகர்கள் இப்படி செய்யாமல் இருந்து இருக்கலாம் என்று நான் சொல்ல மாட்டேன்.

அது அவர்களுடைய சொந்த விருப்பம். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். பிடித்ததை செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் நானாக இருந்து இருந்தால் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘ஜெயிலர் பார்ட் 2’ : ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here