பாலிவுட்டுக்கு நோ சொல்லும் திரிஷா.. என்ன காரணம் தெரியுமா?

0
121

Actress Trisha: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுல் ஒருவர் நடிகை திரிஷா. இவர், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும், பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருடன் இணைந்து ‘கட்டா மீத்தா’ என்ற ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் 2010ஆம் ஆண்டு ரிலீஸானது.

பலரும் பாலிவுட் வரை சென்று தனது நடிப்பு திறமையை காட்டவேண்டும் என ஆவலுடன் இருக்கும் நிலையில் தற்போது வரை திரிஷா பாலிவுட் படங்களுக்கு நோ சொல்லி வருவது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு திரிசா ஒரு முறை தனது பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் எனது பணிக்காக மும்பையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அதற்கு நான் தயாராக இல்லை.

ஏனென்றால், இங்கிருந்து பல விஷயங்களை விட்டு மும்பை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனக்கு இங்கே இருக்கும் வசதிகள் அங்கு இருக்காது என தோன்றியது.

அதுமட்டுமல்லாது, பாலிவுட் சினிமா என்பது வேறு ஒரு உலகம். அங்கு சென்று நான் நடிக்க வேண்டும் என்றால், புதிதாக படத்தில் நடிப்பது போன்று தோன்றும்.

மேலும், பாலிவுட்டில் வெற்றிப் பெறவேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும். இதுபோன்ற பல விஷயங்களால் தான் எனக்கு பாலிவுட் மீது ஆர்வம் வரவில்லை” என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here