‘கில்லி’ வைப்-ல் ரசிகர்கள்.. திரிஷா வெளியிட்ட பதிவு..

0
80

Ghilli Re-Release: தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவரது ஆரம்பக்கட்ட படங்கள் சரிவர ரீச் ஆகாமல் இருந்த நிலையில் ஒரு சில படங்கள் மட்டும் விஜய்யை தூக்கிவிட்டது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘கில்லி’.

இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இந்த படம் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘கில்லி’ படம் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது.

‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ‘கில்லி’ திரைப்படம் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கில்லி’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 20) ரீரிலீஸானது. இதுவரை ரீ ரிலீஸான படங்களில் கில்லி படத்திற்கு தான் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

இன்று ரீ ரிலீஸான கில்லி படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். அடுத்தடுத்த ஷோக்களும் ஹவுஸ்புல் ஆகி வருகிறது. இது குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ரசிகர்கள் மீண்டும் வைப்பில் இருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் படத்தை கொண்டாடும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கில்லி படத்தை பல முறை பார்த்திருந்தாலும், தியேட்டரில் பார்க்கும் பாக்கியம் 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைக்கவில்லை அதனை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ரிலீஸை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here