சிரஞ்சீவி படத்தில் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கும் திரிஷா..!

0
110

Actress Trisha: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுல் ஒருவர் நடிகை திரிஷா. விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

‘96’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த திரிஷா தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’, ‘விடாமுயற்சி’, ‘தக் லைப்’ போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், மலையாளத்தில் ‘ராம்’, ‘ஐடெண்டிட்டி’ ஆகிய படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த ‘விஸ்வம்பரா’ படத்தில் திரிஷா கதாபாத்திரத்தை மையாக வைத்து படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் திரிஷா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, நடிகை திரிஷா நடிப்பில் வெளியான ‘மோகினி’ என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தற்போது ‘விஸ்வம்பரா’ படத்தின் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here