இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘கள்வன்’. இந்த படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
மேலும், இந்த படத்தில் இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தை டில்லி பாபு தயாரிக்கிறார். பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா ஆகியோர் படத்தொகுப்பு செய்கின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘கள்வன்’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய பாடலான ‘அடி கட்டழகு கருவாச்சி’ என்ற பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
‘கள்வன்’ படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.