‘Idi muzhakkam’: இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இடிமுழக்கம்’. இந்த படத்திற்கு அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடிக்கிறார்.
மேலும், சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘இடிமுழக்கம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘அடி தேனி சந்தையில்’ என்ற பாடல் இன்று (பிப்.24) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுகிறார்.
இந்த நிலையில், இந்த பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ‘அடி தேனி சந்தையில்’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக இந்தப் படம் 22ஆவது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.