அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு.. முதற்கட்ட ஆலோசனை இன்று தொடக்கம்..

0
55

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.

அந்த வகையில்,அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கு நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here