அமேசான் ஓடிடி-யில் இனி விளம்பரங்கள் வரும்..! அப்செட்டில் வாடிக்கையாளர்கள்..!

0
89

ஓடிடி தளங்கள் சமீப காலமாக மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு ஒரு காரணம் என்னவென்றால் திரைப்படம், வெப் சீரிஸ்கள் பார்க்கும் போது இடையில் எந்த ஒரு விளம்பரங்களும் வராது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஓடிடி நிறுவனம் நேற்று முதல் தனது தளத்தில் திரைப்படம் பார்க்கும்போது இடையில் விளம்பரங்கள் வரும்படி அமைத்துள்ளது.

அந்த விளம்பரங்கள் தேவையில்லை என்றால் மாதத்திற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தையும் அமேசான் ஓடிடி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டமானது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் ஆண்டின் தொடக்கத்தின் முதல் அமலானது. அடுத்தபடியாக ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

ஆனால், இந்தியாவில் அமல்படுத்துவது குறித்து இது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஏற்கெனவே விளம்பரங்கள் வரத்தொடங்கியுள்ளது.

ஆகையால், விரைவில் அமேசான் ஓடிடி தளத்திலும் விளம்பரம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமேசான் ஓடிடி தளத்தின் வாடிக்கையாளர்கள் தற்போது பெரும் அப்செட்டில் உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த மீனாட்சி சவுத்ரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here