ட்ரெண்டிங்காகும் லால் சலாம் படத்தின் ‘Ae Pulla Making Video’..!

0
79

‘Ae Pulla Making Video’: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

இந்த நிலையில் முன்னதாக வெளியான இந்த படத்தின் ‘ஏ புள்ள’ பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ‘Test’ படப்பிடிப்புகள் நிறைவு..! வீடியோ வெளியிட்ட படக்குழு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here