‘முதன்முதலாக கமலுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்’.. ‘தக்லைப்’ படத்தில் இணையவுள்ளதாக தகவல்..

0
51

இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து இயக்கும் திரைப்படம் ‘தக்லைப்’. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக மணிரத்னம் இயக்கிய இருவர், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார்.

‘தக்லைப்’ படத்தில் ஏற்கனவே கமலுடன் சேர்ந்து திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராயின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு தான் ஒரு முறையாவது ஐஸ்வர்யா உடன் நடிக்க வேண்டும் என தீரா ஆசை இருக்கும். அந்த சூழலில் கமல்ஹாசன் இதுவரை ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

தகவல் வெளியானதுபோல ‘தக்லைப்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்தால் இதுவே அவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படமாக இருக்கும்.

இதையும் படிங்க: ‘ரகு தாத்தா’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here