ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்திற்கு ‘சிஸ்டர்’ என டைட்டில்!

0
73

அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் புதிய திரில்லர், காமெடியாக உருவாகி வரும் படம் ‘சிஸ்டர்’. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். துவாரகா புரடக்‌ஷன் பிளேஸ் கண்ணன்-ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை திரைப் பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பெயரை வெளியிட்டு, படக்குழு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி, தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘Conjuring Kannappan’ வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here