கேப்டன் விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மறைந்த விஜயகாந்த்தின் உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேரில் வரமுடியாத நடிகர்கள் வீடியோ மூலம் தங்களது இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாத நடிகர்கள் நேற்றும், இன்றும் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்தி, சரத்குமார், சசிகுமார் ஆகியோர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “விஜயகாந்த் இறந்தபோது நான் பாண்டிச்சேரி ஷூட்டிங்கில் இருந்தேன்.
இப்போது தான் சென்னைக்கு வந்தேன், வந்த உடனே இங்கு வருகிறேன். விஜயகாந்த்தின் மகன்கள் இருவரும் எனக்கு நண்பர்கள் அவர்களிடம் அடிக்கடி கேட்பேன் ஒருமுறையாவது விஜயகாந்த் சாரைப் பார்க்க வேண்டும் என கேட்பேன். ஆனால், என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை.
அவர் ஒரு நல்ல மனிதர் மக்களுக்காக நிறைய செய்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தான் அவரது இறுதி அஞ்சலிக்கு இவ்வளவு மக்கள் கூடியிருந்தனர். கண்டிப்பாக அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” எனப் பேசினார்.
ஆனால், அவரது பேச்சு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் பேசுகையில், பாண்டிச்சேரியில் இருந்து தற்போது தான் சென்னைக்கு வந்ததாக கூறியிருந்தார். ஆனால், அவர் ஏற்கனவே சென்னைக்கு வந்ததாகவும் நேற்று ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றதாகவும் கூறி வருகின்றனர்.
நேற்று கடை திறப்பு விழாவுக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தான் சென்னைக்கு வந்ததாக கூறிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அஞ்சலி செலுத்தும் இடத்தில் சிரித்தபடியே இருந்ததாகவும் கொஞ்சம் கூட கவலைப் படாமல் ஜாலியாக வந்துவிட்டுச் சென்றாக ரசிகர்கள் அவர் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா!..