‘Lal Salaam’: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்டது. இந்த படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் ஒருகட்டத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையத் தொடங்கியது.
இதன் காரணமான படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகினது. மேலும், இந்த ‘லால் சலாம்’ படம் ஒரு திரையரங்கில் கூட ஹவுஸ் புல் ஆகவில்லை என்ற கருத்தும் உள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘லால் சலாம்’ படம் குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாரசியாம தகவல் ஒன்று கூறியுள்ளார். அதில், “லால் சலாம் படத்தின் 21 நாட்கள் படப்பிடிப்பு காட்சிகள் காணாமல் போனது.
என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது, ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட படக்குழு அனைவரும் ரீ ஷூட் செய்ய தயராக இருந்தனர். ஆனால், கடைசியில் எங்களால் ரீ ஷூட் செய்ய முடியவில்லை, இருக்கிறதை வைத்து படத்தை எடிட் செய்தோம்” என கூறியுள்ளார்.