‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்..! மாஸ் ரிப்ளை கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

0
154

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

இந்த நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது, நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “நாங்கள் லால் சலாம் படம் குறித்த அப்டேட்டுகள் எல்லாம் வெளியிட்டு வந்தோம்.

ஆனால், அதற்கு எங்களுக்கு வரும் ரிப்ளைகள் எல்லாம் ‘தலைவர் 171’, படத்தின் அப்டேட் கொடுங்க, ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் கொடுங்க என வரும். இதையெல்லாம் பார்க்கும்போது நம்ம அவங்களோட லிஸ்டிலேயே இல்ல போல என நினைத்தேன்.

இப்ப சொல்கிறேன், அடுத்ததாக என்னுடைய படமும் உங்களுடைய லிஸ்டில் இருக்கும்” என்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here