தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இசைத்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. மேலும், புதிதாக ஒரு பாடல் இசைத்தாலும் கட்டாயம் ஹிட் தான் என ரசிகர்கள் நம்பும் அளவிற்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக பாடல்களை அமைத்து வருகிறார்.
தமிழைத் தொடர்ந்து இந்திய அளவில் இவர் பல படங்களுக்கு பாடல்கள் இசையமைத்துள்ளார். தமிழில் முதல் முதலாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த ‘3’ படத்தில் அவர் இசைமைத்த அனைத்துப் பாடல்கள் ஹிட் தான். அதிலும், ‘வொய் திஸ் கொலவெறி’ பாடல் உலக அளவில் டிரெண்டானது. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு மாஸ் பிஜிஎம் உருவாக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், அனிருத் குறித்து இரு சுவாரசியாமன தகவலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதன்படி, நடிகர் தனுஷ் தான் அனிருத்திற்குள் இவ்வளவு பெரிய திறமை இருப்பதை கண்டறிந்ததாக கூறுகிறார்.
மேலும், அனிருத்தின் பெற்றோர் அவரது மேல்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தனர். அப்போது தனுஷ் தான் அவர்களை சமாதானப்படுத்தி அனிருத்திற்குள் நிறைய திறமைகள் உள்ளதாக கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, அனிருத்திற்கு நடிகர் தனுஷ் கீபோர்டு வாங்கிக்கொடுத்து தனது ‘3’ படத்தில் இசையமைக்க அழைத்துச் சென்றதாகவும் ஐஸ்வர்யா கூறுகிறார். இப்படி தான் அனிருத் சினிமாவிற்குள் நுழைந்ததாகவும், தற்போது அனிருத் ஒரு மிகப்பெரிய உயரத்தில் இருப்பதாகவும் அதற்கு அவரது உழைப்பு தான் காரணம் என கூறினார்.