பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் அஜித்..! ரசிகர்களுக்கு கன்பார்ம் ட்ரீட்..!

0
108

கேஜிஎப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் இயக்கிய பிரசாந்த் நீல். இவர் சமீபத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் ஆகியோரை வைத்து இயக்கிய திரைப்படம் ‘சலார்’.

சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் அடுத்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கேஜிஎப் முதல் பாகம் வெளியான நிலையில் பிரசாந்த் நீல் உடன் இணைந்து பணியாற்ற அஜித் விரும்பியதாகவும், கேஜிஎஃப் 2 பணிகளில் அவர் பிஸியாக இருந்ததால் அது நடக்காமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அஜித்தை வைத்து இயக்க பிரசாந்த் நீல் தரப்பில் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும், இருவரும் இணைந்து படம் செய்வதை உறுதிபடுத்திகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் ‘கேஜிஎப் 3’, ‘என்டிஆர் 31’, ‘சலார் 2’ ஆகிய படங்கள் கையில் உள்ள நிலையில் தற்போது அஜித்தை வைத்து இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரது லிஸ்டில் இருந்து ஒரு படத்தை தள்ளி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்குப் பிறகு எந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: DNS படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்..! படக்குழு அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here