பைக் சாகச நண்பர்களுடன் அஜித்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

0
103

Actor Ajith : இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருந்தது.

ஆனால், அஜித்திற்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலம் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் பைக் பயணத்தை தொடங்கியுள்ளது போல ஒரு புகைப்படம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக் பயணத்திற்கு செல்லும் உடையில் அமர்ந்திருக்கிறார். அதோடு அவர் பைக் பயணம் செல்லவிருப்பதை தெரிவிக்கும் வகையில், புகைப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு என்னவானது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இது பழைய புகைப்படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் அஜித் தனது விடாமுயற்சி படக்குழுவுடன் பைக் பயணத்தை மேற்கொண்டு வரும் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும், தனது பைக் சாகச நண்பர்களுடன் அஜித் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here