அஜித்தின் விபத்து வீடியோ ஏன் வெளியானது?.. சுரேஷ் சந்திரா கூறுவது என்ன?..

0
100

Surech Chandra: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் நேற்று அஜித்குமாரின் கார் விபத்து வீடியோக்கள் வெளியாகி பரவி வருகின்றன. பலரும் இந்த வீடியோவைப் பார்த்து அஜித்தின் உடல் நலம் குறைத்து விசாரித்து வருகின்றனர். அதில் சிலர் இந்த மாதிரியான வீடியோக்களை வெளியிட வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர்.

ஆகையால் வீடியோ வெளியிடுவதற்கான காரணம் குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “சமூக வலைத்தளங்களில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இது வதந்தி என்பதை காட்டுவதற்காகவும், விடாமுயற்சி முழு மூச்சில் நடைபெற்று வருவதை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அஜித்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here