‘ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க வேண்டும்’ – அஜித் போட்ட கண்டஷனால் ஆடிப்போன படக்குழு..!

0
108

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

இதனால், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் விடாமுயற்சி படத்தை முடித்துவிட வேண்டும் என நடிகர் அஜித் கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here