Ajith – Shalini: நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தின் மூலம் அறிமுகமாகினர். ஷூட்டிங்கில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது.
இதனையடுத்து, 2000ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2008ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயர் வைத்தனர். இதையடுத்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆத்விக் என பெயர் வைத்தனர்.
நடிகர் அஜித் – ஷாலினியின் காதல் திருமணம் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு அஜித் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும், அஜித் – ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25ஆவது ஆண்டு காதல் திருமணத்தை கொண்டாடினர். இந்த வீடியோ வெளியான நிலையில், அவர்களுக்கு பிடித்த ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ என்ற பாடல் ஒலிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.