தனது சிலை திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அல்லு அர்ஜூன்..!

0
130

‘Allu Arjun’: தெலுங்கு சினி உலகில் முன்னனி நடிகரான அல்லு அர்ஜூன் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்கள் கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாகினார்.

தொடர்ந்து, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார்.

மேலும், புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றியத் தொடர்ந்து தற்போது ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, சமீபத்தில் அல்லு அர்ஜூன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ‘புஷ்பா’ மூன்றாம் பாகம் வரும் எனவும் ஒரு மிகப்பெரிய அப்டேட்டையும் கொடுத்திருந்தார்.

இப்படி தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் மேலும் ஒரு உற்சாகமான சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, துபாயில் உள்ள பிரபல மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜூன் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

பிரபலமானவர்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலைகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த பட்டியலில் நடிகர் அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார்.

இந்த மியூசியத்தில் முன்னதாக அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஆகியோர்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இதில், முதன்முதலில் தென்னிந்திய நடிகர்களில் அல்லு அர்ஜுன் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தனது மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here