ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அமலா பால்..! என்ன நடந்தது?

0
104

Amala Paul: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர், 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ எனும் மலையாள நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘தி கோட்ஸ் லைஃப்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருக்கிறார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சுனில் கே.எஸ்.ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

சமீபத்தில் தற்போது ‘தி கோட்ஸ் லைஃப்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘நஜீப்’ எனும் கதாப்பாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார்.

கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு மாட்டி கொண்டு அடிமையான ஒருவரது கதை தான் இந்த ‘தி கோட்ஸ் லைஃப்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது, படத்தின் கதாநாயகியான அமலா பால் தனது கணவருடன் கலந்துகொண்டார்.

கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை மறுமணம் செய்து கொண்ட அமலா பால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அத்துடன் இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தற்போது உள்ள கால கட்டத்தில் நடிகைகள் பலரும் அவர்கள் நடித்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வதில்லை. இந்த சூழலில் கர்ப்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமலா பால் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here