‘விநாயகர் சதுர்த்தி தான் கரெக்ட் ஆன நேரம்’.. ‘அமரன்’ படக்குழு முடிவு..!

0
181

Amaran Update: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த ‘அமரன்’ படமானது ஒரு இந்திய ராணுவ பின்னனியில் நடைபெறும் கதை என கூறப்படுகிறது. இதற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 20 நாட்களில் முடிவடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘அமரன்’ படம் கட்டாயம் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய நிலையில் ‘அமரன்’ படம் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here