அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’.. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற டீசர்..!

0
141

Uyir Thamizhukku: மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்த படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சாந்தினி, ஆனந்த்தராஜ், ஶ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சுப்ரமணியசிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

மேலும், தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்திற்கான பாடல்களை பா.விஜய் எழுதியிருக்கிறார். படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா ஆகியோர் எழுதியுள்ளனர்.

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் இன்று (மார்ச்.29) வெளியானது. இந்த டீசரும் வரும் ‘தர்மத்தின் வாழ்வு சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வெளியாகவுள்ள இந்த அரசியல் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here