Amigo garage: அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் திரைப்படம் ‘அமிகோ கேரேஜ்’. இந்தப் படம் கேங்ஸ்டர் இளைஞரின் வாழ்க்கை குறித்த கதை என கூறப்படுகிறது.
இந்த படத்தில், ஜிஎம் சுந்தர் தசரதி, தீபா பாலு, அதிரா ராஜ், முரளிதரன் சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகேந்திரனுக்கு இந்த ‘அமிகோ கேரேஜ்’ திரைப்படம் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் படக்குழு கூறுகிறது.
இந்தப் படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். மேலும் விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். இந்தப் படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரிக்க, ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அமிகோ கேரேஜ்’ படம் வருகிற மார்ச் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.
தற்போது அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, மகேந்திரன் நடிப்பில் இன்னும் சில படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.