மலை உச்சியில் ப்ரொபோஸ் செய்த காதலர்..! வைரலாகும் எமி ஜாக்சன் நிச்சயதார்த்த புகைப்படம்..!

0
81

Amy Jackson: தமிழ் சினிமாவில் ஆர்யா நடித்த ‘மதராசபட்டினம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து அவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் எமி ஜாக்சன் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த ‘மிஷன் சாப்டர் 1’ படம் மெகா ஹிட்டானது. இந்த படத்தில் எமி ஜாக்சன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து அவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சில வருடங்கள் மும்பையில் வசித்து வந்த எமி ஜாக்சன் பின்னர் அவர் இங்கிலாந்திற்கே சென்றுவிட்டார். அங்கு ஜார்ஜ் பனாயிட்டோவ் என்பவருடன் எமி ஜாக்சன் திருமண நிச்சயம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே 2019ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தைக்குத் தாய் ஆனார்.

இந்த நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர், எட்வர்டு வெஸ்ட்விக் என்ற ஆங்கிலேயே நடிகரை எமி ஜாக்சன் காதலித்து வந்தார். அவ்வப்போது, இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று எமி, எட்விக் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டனர். சுவிட்சர்லாந்து நாட்டில் பனி படர்ந்த மலை உச்சியில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர். இதற்கு, சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பலரும் எமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘ஏஐ’ குரலால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த பிரச்சினை..! என்ன நடந்தது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here