‘நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை’ – அனன்யா பாண்டே!

0
77

Ananya Panday: பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை அனன்யா பாண்டே. இவர், ‘ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2’, ‘காலி பீலி’, ‘கெஹ்ரையான்’, ‘லைகர்’, ‘டிரீம் கேர்ள்-2 புல்’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘கண்ட்ரோல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, மூத்த அரசியல்வாதியும், வழக்கறிஞருமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பாண்டேவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சவாலான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் அனன்யா பாண்டே, தற்போது முன்னாள் நடிகைகள் சிலரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

அந்த வகையில் பாலிவுட் முன்னாள் நடிகைகள் மதுபாலா மற்றும் ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்புகிறார். அவர்களின் வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுபாலா, ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை எடுக்க விரும்புவதாக கூறிய பல இயக்குநர்களின் கவனம் தற்போது அனன்யா பாண்டே மீது திரும்பி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here