ஓடிடியில் வெளியாகவுள்ள ‘அனிமல்’ படம்: ‘சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள் இடம்பெறும்’ – படக்குழு தகவல்!

0
107

Animal’: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இப்படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார்.

இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரூ.900 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘அனிமல்’ வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

முன்னதாக, ‘அனிமல்’ திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ள அனிமல் திரைப்படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 30 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான போது படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘மதமும், கடவுளும் அரசியல்வாதிகள் கையில் சிக்குவது தீங்கை விளைவிக்கும்’ – நடிகர் கிஷோர் பதிவு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here