தமிழில் ரீமேக் ஆகும் ‘அனிமல்’.. சூர்யா தான் ஹீரோவா?.. கதறும் ரசிகர்கள்..

0
102

Animal Remake: இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த படம் அனிமல். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியாது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்த நிலையிலும் இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே இந்த படம் கடந்த 26ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கியது. பலரும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அனிமல் படத்தின் தமிழ் ரீமேக் குறித்து சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சந்தீப் ரெட்டி வங்கா பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, “எனது அனிமல் படத்தின் தமிழ் ரீமேக் தயாராக இருக்கிறது.

இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்க நடிகர் சூர்யாவை நான் தேர்வு செய்துள்ளேன்” என கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

இருந்தாலும், நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை. அனிமல் படம் குறித்து பல விமர்சனங்கள் வந்தது தமிழ்நாட்டில் தான். இப்படி இருக்க இந்த படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பே இல்லை என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here