‘கஞ்சா சங்கர்’ படத்திற்கு வந்த சிக்கல்..! போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ்.!

0
149

‘Gaanja Shankar’: இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கஞ்சா சங்கர்’. இந்தப் படத்தின் தலைப்புக்கு, தெலங்கானா போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், படத்தின் இயக்குநர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் நாகவம்சி, கதாநாயகன் சாய் தரம் தேஜ் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், “படத்தில் கதாநாயகன் ஒரு கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவது போலவும் அவர் செயல்களை கொண்டாடுவதாகக் காட்டுவதும் ஏற்புடையதல்ல. தலைப்பில் இருக்கும் கஞ்சா என்ற வார்த்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால், இந்த தலைப்பை மாற்ற வேண்டும். போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here