ரசிகர்களின் ஆபாச கமெண்ட்.. மனவுளைச்சலில் அனுபமா.. என்ன நடந்தது?..

0
105

Anupama Parameswaran: மலையாளத்தில் மாபெரும் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளம், தமிழ் மொழிப் படங்களை விட அதிகமான தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் சித்துவுடன் இணைந்து ‘டில்லு ஸ்கொயர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் நாளை ரிலீஸாகவுள்ளது. இதற்கான புரமோஷன்கள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அனுபமா கலந்துகொள்ளவில்லை.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நிகழ்ச்சியின் போது படத்தின் கதாநாயகன் சித்து, “இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்ட்டரை வைத்து அனுபாமாவை ரசிகர்கள் கிண்டலித்து வருகின்றனர்.

இதனால் அப்செட்டான அனுபமா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. ஒரு நடிகையாக அவர் இருக்கும் பட்சத்தில் அவர் குறித்த கமெண்ட்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம்” என பேசினார்.

முன்னதாக வெளியான அந்த போஸ்டரில் அனுபமாவின் கை, கதாநாயகனின் இடிப்பிற்கு கீழ் இருக்கும் இதனை வைத்து தான் அனுபமாவை கிண்டலடித்து பேசியுள்ளனர்.

இதன் காரணமாகவே மனவுளைச்சலில் இருந்த அனுபமா நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இந்த படத்திற்கு இதுவரை நடந்த அனைத்து புரமோஷன் நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here