‘ரத்னம்’: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. இது விஷாலின் 34 ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இந்த நிலையில், ‘ரத்னம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
‘இந்தியன் 2’: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தற்போது இரண்டு மற்றும் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் வருகிற மே மாதம் ரிலீஸாக உள்ளது.
‘தங்கலான்’: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடித்துள்ளனர். ‘தங்கலான்’ படத்தின் சில போர்ஷன்கள் திருப்திகரமாக வரவில்லை என கூறப்பட்டது.
இதன் காரணமாக அந்த காட்சிகளை மட்டும் ரீ-ஷூட் செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப்போகும் என தகவல் வெளியானது.
ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் ‘தங்கலான்’ படம் வருகிற மே 17ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான் தகவலும் வெளியாகும் என கூறப்படுகிறது.
‘ராயன்’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் வருகிற மே மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஸ்டார்’: இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்த நிலையில், கவினின் இந்த ‘ஸ்டார்’ திரைப்படமும் வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.