‘ஏஐ’ குரலால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த பிரச்சினை..! என்ன நடந்தது?

0
98

A.R.Rahman: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ‘திமிறி எழுடா’ என்ற பாடலை ‘ஏஐ’ (Artificial intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களது குரலில் உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த பாடகர்களான ஷாகுல் அமீது, பாம்பே பாக்யா ஆகியோரது குரலை ‘ஏஐ’ மூலம் உருவாக்கி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களில் குரலை மீண்டும் கொண்டு வந்த ஏ.ஆர்.ரஹ்மானை பலரும் பாராட்டி வரும் நிலையில் பலரும் இதற்கு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்தவர்களது குரலையும், உருவத்தையும் பயன்படுத்துவது சரியல்ல என கூறினர்.

இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “மறைந்தவர்களது குடும்பத்தினரிடம் இதற்காக அனுமதி பெற்றோம். மேலும, நல்லதொரு சம்பளமும் அதற்காக வழங்கப்பட்டுள்ளது. டெக்னாலஜி என்பதை சரியாகப் பயன்படுததினால் அது ஆபத்தல்ல, தொல்லையும் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘பெரும் காலத்தின் மனசாட்சியாக திகழ்ந்தவர் காந்தி’ – கமல்ஹாசன்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here