தனுஷைப் பார்த்து வியந்து போன ஏ.ஆர்.ரகுமான்.. உடனே எடுத்த அதிரடி முடிவு..

0
113

‘AR Rahman’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் புகைப்படங்கள் வெளியானது. அதன்படி, இந்த படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார். அப்போது, தனுஷின் இயக்கத்தைக் கண்டு வியந்துபோய் பார்த்திருக்கிறார். ஒரு நாள் முழுவதும் அங்கு இருந்த ரகுமான், தனுஷை கூப்பிட்டு, ‘வேற லெவலில் படம் எடுக்கிறீர்கள்’ என பாராட்டியுள்ளார்.

உடனே, தான் கிளம்பி போய் படத்திற்கு ரீ ரெக்கார்டிங் செய்வதாக கூறியுள்ளார். இதற்கு முன்னாடி வெளியான அனைத்துப் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துவிட்டு, ரீ ரெக்கார்டிங்கை தனது உதவி இசையமைப்பாளர்களிடம் கொடுத்துவிடுவதாக பலரும் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ராயன் படத்தின் மேக்கிங்கை பார்த்தவுடம் தான் உடனே ரீ ரெக்கார்டிங் செய்யப்போவதாக கூறிய சம்பவம் சினிமா வட்டாரங்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த செய்தி ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here