டிரெண்டிங் நம்பர் 1-ல் ‘அரண்மனை 4’ டிரைலர்..

0
107

‘Aranmanai 4’: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுந்தர்.சி இயக்கி நடித்த படம் ‘அரண்மனை’. 2014ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘அரண்மனை 2’ திரைப்படம் 2016ஆம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் திரிஷா, ஹன்சிகா ஆகியோரை முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இரண்டாம் பாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு ‘அரண்மனை 3’ படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஆனால், இந்த மூன்றாம் பாகம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது ‘அரண்மனை 4’ பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியானது. திகில் கலந்த மிரட்டலாக வெளியான இந்த ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை யூடியூப்பில் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலரை 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ‘அரண்மனை 4’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு நான்காம் பாகத்திற்கும் இருக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here