வடசென்னையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்குதலின்போது அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் யார் வேட்புமனு தாக்கல் செய்வது என விவகாரத்தில் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முதலில் அதிமுக தான் வந்ததாகவும், இரண்டாவதாக தான் திமுக வந்ததாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இருந்தனர்.
அப்போது, நான் தான் முதலில் டோக்கன் வாங்கினேன் என சேகர் பாபு கூற அதற்கு நான் தான் முதலில் வந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூற, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, யோவ் போய்.. என சேகர் பாபு பேசினார். ஒருகட்டத்தில் அதிமுகவின் R.S.ராஜேசுக்கும், சேகர் பாபுவுக்கு வாக்குவாதம் முற்றியது. அப்போது அவர் யோவ், போடா.. என மரியாதை குறைவாக பேசினார்.
இவர்களது இந்த வாக்குவாதத்தால் தேர்தல் அதிகாரி செய்வதறியாமல் திகைத்துப்போகினார். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.