வெங்கட் பிரபு வெளியிடும் ‘அரிமாபட்டி சக்திவேல்’ டிரைலர்..!

0
121

‘Venkat Prabhu’: அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் அறிமுக நடிகர் பவன்.கே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’. இந்த படத்தில் நடிகர் சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் மேகனா எலன், இமான் அண்ணாச்சி, சூப்பர்குட் சுப்ரமணி, ஹலோ கந்தசாமி, கராத்தே வெங்கடேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

கிராமத்தில் உள்ள கட்டுப்பாடுகளை ஒருவன் மீறும்போது நடக்கும் பிரச்சினை தான் இந்த படத்தின் திரைக்கதை என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அரிமாபட்டி சக்திவேல்’ படத்தின் டிரைலர் நாளை (பிப்.28) வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிடுகிறார்.

முன்னதாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here