Arnold: அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டரான அர்னால்டு 1970ஆம் ஆண்டு வெளியான ‘ஹெர்குலஸ் இன் நியூயார்க்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பினனர் 1984ஆம் ஆண்டு வெளியான ‘தி டெர்மினேட்டர்’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார்.
உலகளவில் பாதி இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல காரணமே அர்னால்டுதான். அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது. அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருந்தது காரணமாக அவருக்கு பேஸ் மேக்கர் சிகிச்சை நடந்திருக்கிறது.
இந்த நிலையில், பேஸ் மேக்கர் சிகிச்சை குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அனைவருக்கு நன்றி! நான் என்னைப் பற்றி வெளியான பல வகையான செய்திகளைப் பார்த்தேன்.
அதில் முக்கியமான ஒன்று ‘பூபர் சீசன் 2’ படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக அந்த மாதிரி நடக்க வாய்ப்பில்லை. ஏப்ரல் மாதத்தில் கட்டாயம் படப்பிடிப்பிற்குச் செல்ல நான் தயாராக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.