மாபெரும் எதிர்பார்ப்பில் ‘Article 370’ திரைப்படம்..! வைரலாகும் டிரைலர்..!

0
183

‘Article 370’: ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் நடிகை யாமி கெளதம் நடித்துள்ள படம் ‘ஆர்ட்டிகல் 370’ . இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரியா மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம் காஷ்மீரின் தலைவிதியை மாற்றிய உண்மை சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ‘பத்லாபூர்’, ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’, ‘பாலா’, ‘ஏ தேர்ஸ்டே’ மற்றும் ‘சோர் நிகல் கே பாகா’ போன்ற படங்களைத் தொடர்ந்து யாமி கெளதம் நடிக்கும் அடுத்த அரசியல் படம் ‘ஆர்ட்டிகல் 370’.

இந்த படத்தில், கௌதம் ஒரு உளவுத்துறை ஏஜென்டாக நடிக்கிறார். ஆர்ட்டிகல் 370ஐ செயலிழக்கச் செய்வதன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதத்தை அகற்றுவது போன்ற கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

மத்திய அரசு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இது தொடர்பாக இந்த கதை உருவாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் ரிலீஸுக்கு பல்வேறு வகையில் பிரச்சினைகள் வரலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இருதபோதிலும், இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here