அருண்விஜய் புதிய படத்தின் பூஜை.. வைரலாகும் புகைப்படங்கள்..!

0
95

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர், தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ மாபெரும் ஹிட்டடித்தது.

அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து, பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மான் கராத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த படம் அருண் விஜய்யின் 36ஆவது படமாகும். இந்த படத்திற்கான பூஜைகள் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் புகழ் பாலாஜி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை சித்தி இத்னானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தில் இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here