ஜெயம் ரவி இடத்தை பிடித்த அருண் விஜய்..!

0
85

‘ArunVijay in Thug life’ : இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து இயக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த ‘தக்லைப்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்க இருந்தனர். ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகினார்.

அவரை தொடர்ந்து ஜெயம் ரவியும் படத்தில் இருந்து விலகினார். ஜெயம் ரவி கையிலும் பல பட்ங்கள் இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இவரும் படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இதுபோன்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு தரவில்லை. கூடிய விரைவில் அப்டேட் வெளியாகும் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here