‘Arya – Sayyeshaa’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவரும் நடிகை சாயிஷாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு அரியனா என பெயர் வைத்துள்ளனர். ஒரு பக்கம் ஆர்யா படங்களில் பிஸியான இருந்த நிலையில் ஆயிஷா குழந்தையை பார்த்துக்கொண்டார்.
அரியனாவுக்காக தனியே இன்ஸ்டகிராம் பக்கமும் உள்ளது. அந்த பக்கத்தில் அரியனாவின் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சாயிஷாவும் தனக்கென யூடியூப் சேனல் வைத்துள்ளார்.
இப்படி இவர்களது அழகான வாழ்க்கை தொடங்கி இன்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களது 5ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமான நடிகர் ஆர்யா தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நான் உன்னிடம் பகிர்ந்துகொண்டு, கற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, திருமண நாள் வாழ்த்துகள் சாயிஷா’ என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அழகான ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.