சந்தானம் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் ஆர்யா..!

0
68

நடிகர் சந்தானம் நடிப்பில் காமெடி கலந்த திரில்லர் பேய் படமாக வெளிவந்தது ‘தில்லுக்கு துட்டு’ படம். லொல்லு சபா ராம்பாலா இயக்கத்தில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியானது.

சமீபத்தில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சந்தானம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தை ஆர்யா தயாரிக்கின்றார்” என மேடையில் அறிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சந்தானமும் ஆர்யாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் தற்போது சந்தானம் நடிக்கும் படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here