பட்டப்பகலில் பீர் குடிக்கும் அசோக் செல்வன்..! வைரலாகும் வீடியோ..!

0
90

இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜன.25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சாந்தனு தனது ‘X’ தளத்தில் நடிகர் அசோக் செல்வன் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அசோக் செல்வன் உடன் இருந்தவரிடம் ‘டேய் பட்டப்பகலில் பீர் குடிச்சிட்டு இருக்க’ என கேட்டுக்கொண்டே அந்த குளிர்பானத்தை வாங்கி குடிக்கிறார். இந்த வீடியோவை நடிகர் சாந்தனு பகிர்ந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here