ரூ.3 லட்சத்தை அபேஸ் செய்த உதவி இயக்குநர்.. போலீசில் புகார் அளித்த இயக்குநர்..

0
124

Desingh Periyasamy: தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, நேற்று (ஏப்ரல் 4) சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

முகமது இக்பால் என்பவர் 2018ஆம் ஆண்டு முதல் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். என்னுடன் பணியில் சேர்ந்த நாள் முதல் எனது வீட்டு வரவு, செலவு கணக்குகளை முகமது இக்பால் தான் கவனித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு 150 கிராம் தங்க நகைகளை அவரிடம் கொடுத்து, தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துவிட்டு பணம் பெற்று வருமாறு கூறியிருந்தேன்.

அவரும் நகைகளை அடகு வைத்துவிட்டு 3 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர், அவரிடம் பணம் குறித்துக் கேட்டதற்கு தரமுடியாது என கூறி எனக்கும், எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரங்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here