அதர்வாவை வைத்து புதிய படம் இயக்கும் ராஜேஷ்..! கதாநாயகி யார் தெரியுமா?..

0
102

தமிழ் சினிமாவில் ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ போன்ற காமெடி வெற்றி படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவர் சமீபத்தில் இயக்கிய படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. தொடர் தோல்வியைச் சந்தித்து வந்தார்.

தற்போது நடிகர் ஜெயம் ரவியை வைத்து ‘பிரதர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து நடித்த அதிதி ஷங்கர், தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தில் ஆகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஆகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இந்த நிலையில், தற்போது அதர்வாவுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், தம்பியைத் தொடர்ந்து அடுத்தபடியாக அண்ணனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் தனுஷின் புதிய படத்தின் அப்டேட்.. மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கை கோர்ப்பதாக தகவல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here