சஸ்பென்ஸ் திரில்லாராக உருவாகும் ‘அதோமுகம்’..!

0
181

அறிமுக இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அதோமுகம்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் எஸ்.பி.யும், கதாநாயகியாக சைத்தன்யா ஆகியோரும் அறிமுகமாகின்றனர்.

மேலும், இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியனும் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு சரண் ராகவன் பின்னணி இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய விஷ்ணு விஜயன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தை இதுவரை பட விநியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘அதோமுகம்’ ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லாராக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கதாநாயகன் தனது மனைவியின் செல்போனில் அவருக்குத் தெரியாமல் ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்கிறார். இதனால் ஏற்படும் பாதிப்புகள், அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறுவது குறித்த கதை தான் இந்தப் படம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here