தமிழ் முன்னனி நடிகை திரிஷா குறித்து அரசியல் பிரமுகர் ஏ.வி.ராஜு அவதூறாக பேசியிருந்தார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது ‘X’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களிடம் கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது.
அவதூறு பரப்பியவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது குறித்த பணிகளை எனது சட்ட வல்லுநர்கள் மேற்கொள்ளுவார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக சேரன், செல்வமணி, மன்சூர் அலிகான், காயத்திரி ரகுராம் என தமிழ் திரையுலகமே ஏ.வி.ராஜுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஏ.வி.ராஜு தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது பேச்சால் திரைப்பட நடிகையையோ, பிறரையோ நான் தவறாக பேசவில்லை. எனது பேச்சைத் தவறாக சித்தரிக்கின்றனர். நடிகை திரிஷா மனம் புண்படும்படியாக நான் பேசியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.